பெங்களூரு: நாட்டில் இயங்கி வரும் பல்கலைகழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் மாநில அரசிடம் இருந்த அதிகாரத்தை பறித்து மாநில ஆளுநரிடம் வழங்கி பல்கலைகழக மானிய குழு எடுத்துள்ள முடிவுக்கு பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக பாஜ அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அந்தந்த மாநில அரசுகளுக்கு பலவழிகளில் தொல்லை கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை மாநில ஆளுநர்களுக்கு வழங்கி இருக்கும் பல்கலைகழக மானிய குழுவின் முடிவு குறித்து விவாதிப்பதற்காக இன்று பெங்களூருவில் உயர்கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. மாநாட்டை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக மாநில துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் கலந்து கொள்கிறார். இதில் கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, இமாச்சால பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கேரளா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் உயர்கல்வி அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
The post துணைவேந்தர் நியமனம் குறித்து விவாதிக்க பெங்களூருவில் 8 மாநில உயர்கல்வி அமைச்சர்கள் மாநாடு: முதல்வர் சித்தராமையா இன்று தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.