சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் ‘22வது ஆண்டு ரஷ்ய கலாச்சார விழா’ நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியை ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதரக தூதர் வலேரி கோட்ஜேவ் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ரோஸ்டோவ் ஆன் டான் நகரை சேர்ந்த பிரபல ரஷ்ய நடன கலைஞர்களான 17 பெண்கள், 3 ஆண்கள் கொண்ட ஆர்கிட் குழு நடனமாட உள்ளனர். இந்த விழாவானது பிப்ரவரி 3ம் தேதி வரை நடைபெறும்.
சென்னை மட்டுமின்றி கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், ஈரோடு, திருச்செங்கோடு, திருச்சி மற்றும் சிவகாசி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் 18 கல்வி நிறுவனங்களில் இந்நிழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பிரம்மோஸ் ஏவுகணை தந்தை சிவதாணு பிள்ளை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், ரஷ்ய கலாச்சாரம் மற்றும் அறிவியல் மையத்தின் இயக்குநர் அலெக்சாண்டர் டோடோனோவ், தங்கப்பன், இந்து ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post துணைத் தூதரக தூதர் வலேரி கோட்ஜேவ் 22வது ஆண்டு ரஷ்ய கலாச்சார நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்: கோவை உள்பட 8 நகரங்களில் ரஷ்ய கலாச்சார நிகழ்ச்சி appeared first on Dinakaran.