துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் உணவு வழங்கல்

3 months ago 9

சிவகாசி, டிச.2: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, சிவகாசி மாநகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிவகாசி மாநகர திமுக 6வது பகுதி கழகம் சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பகுதி கழகச் செயலாளர் கவுன்சிலர் ஞானசேகரன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த விழாவில மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், தொகுதி பொறுப்பாளர் டாக்டர் செண்பக விநாயகம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினர். மேலும் ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டு, எழுதுபொருட்களையும் வழங்கினர். நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் காளிராஜன், மாநகராட்சி மண்டல தலைவர் சேவுகன் மற்றும் நிர்வாகி மைக்கேல் உட்பட திமுக சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் உணவு வழங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article