சென்னை: ரயில்கள், ரயில் நிலையங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கூடுதல் காவலர்கள் நியமனம், சிசிடிவி கண்காணிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தமிழக ரயில்வே காவல் துறை திட்டமிட்டுள்ளது.
கோவை - திருப்பதி விரைவு ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து கீழே தள்ளிவிட்ட சம்பவம், சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டல், நகை பறிப்பு ஆகிய சம்பவங்களை தொடர்ந்து, ரயில்களில் பெண் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.