மதுரை: துணை முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக இன்று இரவு மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் திமுகவினர் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
விருதுநகரில் அக்.01-ல் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் வகையில் இன்று இரவு 8.30 மணியளவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக வருகை தருவதால் மதுரை வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க திட்டமிட்டிருந்தனர். அதனையொட்டி அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் பல்லாயிரக்கணக்கான கட்சியினர் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.