சென்னை,
தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்கும்போதே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று முக்கிய அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் சுய விவரத்தில் துணை முதல்-அமைச்சர் என மாற்றியுள்ளார். அதில், "தி.மு.க. இளைஞரணிச் செயலாளர், துணை முதல்-அமைச்சர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ." என குறிப்பிட்டுள்ளார்.