கார் கதவுகள் மூடியதால் மூச்சுத் திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு

2 hours ago 1

அமராவதி,

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் கண்டோன்மென்ட் கீழ் உள்ள துவாரபுடி அருகே நேற்று காலை உதய் (வயது 8), சாருமதி (8), கரிஷ்மா (6), மானஸ்வி (6) ஆகியோர் விளையாட வெளியே சென்றிருந்தனர். இதில் சாருமதியும் கரிஷ்மாவும் சகோதரிகள், மற்ற இருவரும் அவர்களது நண்பர்கள்.

இவர்கள் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவுகள் பூட்டப்படாததால், விளையாட்டு போக்கில் அவற்றைத் திறந்து வாகனத்தில் அமர்ந்தனர். பின்னர் கதவுகள் தற்செயலாகப் பூட்டப்பட்டு, அவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் வெகு நேரமாக சிக்கிக்கொண்ட குழந்தைகள் ஒரு கட்டத்திற்கு மேல் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தனர்.

இதனிடையே, நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் அவர்களைத் தேடத் தொடங்கினர். இறுதியில், உள்ளூரில் உள்ள ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் அவர்களின் உடல்கள் பிணமாக கண்டெடுக்கப்பட்டன. இதனைக்கண்ட பெற்றோர்கள் கதறி அழுதனர்.

இது குறித்து தவலறிந்த போலீசார் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article