துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த மாரி செல்வராஜ்

3 months ago 25

சென்னை,

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதலாக துணை முதல்-அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து துணை-முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்றிற்கும் பேரன்புமிக்க மாண்புமிகு திரு. உதயநிதிஸ்டாலின் அவர்களை இன்று நேரில் சந்தித்து என் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டேன். அவருடைய மக்கள் பணி சிறக்கட்டும்" என்று அதில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்றிற்கும் பேரன்புமிக்க மாண்புமிகு திரு. உதயநிதிஸ்டாலின் அவர்களை இன்று நேரில் சந்தித்து என் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டேன். ❤️ மக்கள் பணி சிறக்கட்டும் @Udhaystalin #DeputyCM pic.twitter.com/ryexiFV83b

— Mari Selvaraj (@mari_selvaraj) October 2, 2024
Read Entire Article