துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து

8 months ago 46

சென்னை,

தமிழகத்தின் துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பொறுப்பேற்றார். இந்த நிலையில் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

குறிஞ்சி இல்லம் அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ், நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

Read Entire Article