சென்னை,
அமைச்சராக இருந்துவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் இன்று மாலை பதவியேற்க உள்ளார். அவருக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
துணை முதல்-அமைச்சராக அறிவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர் சிறப்பாக செயல்பட வேண்டும். அறிவுரை யாருக்கும் அவசியம் இல்லை எல்லாருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். புதிய அமைச்சர்களாக பொறுப்பு ஏற்கும் அமைச்சர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான் அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை. துணை முதல்-அமைச்சர் நியமனம் என்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முடிவு என்றார்.