துணிகளில் ஈர வாடையா? கவலை வேண்டாம்!

2 months ago 10

மழை, குளிர்காலத்தில் எங்கும் பனி, மற்றும் மழை நீரால் ஈரம், துவைத்த துணியெல்லாம் காயாமல் வீட்டுக்குள்ளேயே காற்றாடவிடும் நிலைமை. இதனால் துணிகளில் ஈர வாடையால் சங்கடமான நிலை உண்டாகிறதா? இதை போக்க இதோ எளிய டிப்ஸ்.
உப்பு: கடல் உப்பு அல்லது கல் உப்பை ஒரு பிடி எடுத்துக் மெல்லிய துணியில் கட்டி அறையின் ஒரு ஓரத்தில் கட்டி தொங்கவோ அல்லது ஒரு தட்டிலோ வைத்து விடுங்கள். இரண்டு நாளுக்கு ஒரு முறை உப்பை மாற்றி புது உப்பு வையுங்கள். இது காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிந்துகொள்ளும். வாடை மறையும்.
வெள்ளை வினிகர்: ஒரு பாத்திரத்தில் வெள்ளை வினிகரை ஊற்றி அறையில் ஒரு ஓரத்தில் வையுங்கள். மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே விட்டு விடுங்கள் சிறிது நேரத்தில் ஈர வாடை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
கற்பூரம்: அறையின் ஜன்னல்களை சாத்திவிட்டு ஒரு பாத்திரத்தில் கற்பூரம் வைத்து ஏற்றி கதவு மற்றும் ஜன்னல்களை மூடி சிறிது நேரம் விட்டு விடவும். இப்படி செய்தால் அறையில் இருக்கும் புஞ்சை வாடை, ஈர வாடை மாயமாய் மறைந்துவிடும்.
வேப்பிலை: தண்டுடனான வேப்பிலை கொத்தை எடுத்து துணிகள் வைக்கும் அலமாரியில் வையுங்கள். இது துணிகளில் பூஞ்சைபிடிக்காமல் தடுக்கும். இதனால் துணிகளில் கெட்ட வாடை போய்விடும்.
ஃபேப்ரிக் கண்டிஷனர் : துவைக்கும் போது வெந்நீரில் ஊறவைத்தும் கசக்கலாம். துணிகளுக்கு பயன்படுத்தும் ஃபேப்ரிக் கண்டிஷனர், போன்றவைப் பயன்படுத்தலாம். ஒரே நேரத்தில் அதிக துணிகளை துவைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக துவைத்துக் மின்விசிறிக்குக் கீழ் உலர்த்தலாம்.
அயன் பாக்ஸ்: இந்தச் செயலை அவசரத்திற்கு பயன்படுத்தலாம். அயன் பாக்ஸை நன்கு சூடேற்றி விட்டு மின் இணைப்பைத் துண்டித்து விடவும். பின்னர் துணிகளில் தேய்க்க ஈர வாடை நீங்கும்.
ஏசி அறை: பெரும்பாலும் ஏசி இருக்கும் அறையில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இந்த அறையில் மின்விசிறிக்குக் கீழ் துணிகளை உலர விடலாம். ஆனால் ஈரத்துணிகள் இருக்கும் போது ஏசி பயன்பாட்டைத் தவிர்க்கவும்.
– கவிதா சரவணன், திருச்சி

The post துணிகளில் ஈர வாடையா? கவலை வேண்டாம்! appeared first on Dinakaran.

Read Entire Article