தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை.. தலைமைக் காவலர் உயிரிழப்பு.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

3 months ago 28
ஜம்மு-காஷ்மீரில், கத்துவா பகுதியில் ஜெய்ஷ்-இ-மொகம்மது தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜம்மு-காஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்த தலைமைக் காவலர் உயிரிழந்தார், காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார். கதுவா பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்து ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.இதற்கிடையே, குல்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே-47 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி, வெடிபொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
Read Entire Article