சண்டிகர் : தீரன் அதிகாரம் பட பாணியில், ஹரியானா சென்று மேவாட் கொள்ளையன் இர்பான்கானை (35) தாம்பரம் தனிப்படை போலீசார் பிடித்தனர். தாம்பரம் அருகே கடந்த மார்ச் மாதம் செல்போன், ஜவுளி கடைகளில் துளையிட்டு செல்போன்கள், ரூ. 1.5 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியைச் சேர்ந்த இர்பான் (35) என்பவரை, போலீசார் தேடி வந்தனர். வழக்கில் கைரேகை ஒத்துப்போன நிலையில் கொள்ளையன் இர்பான்கானை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், செல்போன் சிக்னலை வைத்து இர்பான் சொந்த ஊரில் இருப்பதை கண்டுபிடித்ததை அடுத்து, தாம்பரம் துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் ஹரியானா விரைந்தனர். அங்கு மேவாட் பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையன் இர்பான்கானை துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றிவளைத்தனர். இர்பானை கைது செய்யும் போது உள்ளூர்வாசிகள் தடுக்க லாவகமாக பிடித்து டெல்லி வந்துள்ளனர்.
பின்னர் இரவோடு இரவாக இர்பான் கானை சென்னைக்கு விமானத்தில் கொண்டுவந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கண்டெய்னர் லாரியை மடக்கி செல்போனை கொள்ளையடித்த வழக்கில் கடந்த டிசம்பரில் கொள்ளையன் இர்பான்கானுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்த இரண்டே மாதத்தில் ஜாமினில் வெளிவந்து மீண்டும் கைவரிசையில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி முகமது அலியை போலீசார் தேடி வருகின்றனர்.
The post தீரன் அதிகாரம் பட பாணியில், ஹரியானா சென்று கொள்ளையனை துப்பாக்கி முனையில் கைது செய்த தமிழக போலீஸ்!! appeared first on Dinakaran.