திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட மன்னார்குடி வட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சை சரக டிஐஜி ஜியா வுல் ஹக் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவரை டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் வரவேற்றனர்.
முதலாவதாக காவல் நிலையத்தில் சுற்றுப்புறத்தை பார்வையிட்ட சரக டிஐஜி அங்கு நிறுத்தப்பட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை பார்வையிட்டார். தொடர்ந்து காவல் நிலையத்தில் உள்ள பல்வேறு அறைகள் குறிப்பாக ஆண் மற்றும் பெண் விசாரணை கைதிகளின் அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து மன்னார்குடி வட்ட காவல் அலுவலகத்திற்கு உட்பட்ட மன்னார்குடி டவுன் மன்னார்குடி தாலுக்கா மற்றும் தலையாமங்கலம் காவல் நிலையங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பதிவான வழக்குகள் நிலுவையில் உள்ள வழக்குகள் சாலை விபத்துகளை தவிர்க்க மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புகார்கள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் விபரங்கள் உள்ளிட்ட கோப்புகளை டிஐஜி ஜியா வுல் ஹக் ஆய்வு செய்தார்.
மன்னார்குடி வட்டத்தில் சட்ட குழந்தை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ரவுடிகள் மீது கண்காணிப்பு திருட்டை குறைக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டிஎஸ்பி பொறுப்பு மணிகண்டன் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் ஆகியோரிடம் கேட்டறிந்தார் தொடர்ந்து போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
நிச்சயமாக ரவுடிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி குட்கா கஞ்சா விற்பனை மற்றும் பருக்களில் ஈடுபடுவோம் பொது அமைதிக்கு புத்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆய்வின்போது டவுன் எஸ் ஐக்கள், விக்னேஷ் கோமகன் உள்ளிட்டோ உடன் இருந்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்ட காவல் அலுவலகத்திற்கு இன்று காலை வந்த தஞ்சை சரக டிஐஜி ஜியா வுல் ஹக் அங்கிருந்த கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு ரவுடிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். காவல் நிலையங்களுக்கு வரும் பொது மக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது டிஎஸ்பி மணிகண்டன் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் உடன் இருந்தனர்.
The post மன்னார்குடி வட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சை சரக டிஐஜி ஆய்வு appeared first on Dinakaran.