டெல்லி: மே 7ல் தீவிரவாதிகள் முகாம்கள் மீதான இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் விவரங்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. முரித்கே ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமின் பொறுப்பாளர் அபு ஜிண்டால் கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தீவிரவாதி அபு ஜிண்டாலின் உடல் பாகிஸ்தான் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஜெய்ஷ் -இ- முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி முகமது யூஷப் அஷாரும் கொல்லப்பட்டார். தீவிரவாதி மவுலானா மசூத் ஆசாரின் மைத்துனர் ஹபீஸ் முகமது ஜமீல் கொல்லப்பட்டார். லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த காலித் என்ற தீவிரவாதியும் இந்திய தாக்குதலில் பலி. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி முகமது ஹாசன் கான் இந்திய தாக்குதலில் உயிரிழந்தது தெரியவந்தது.
The post மே 7ல் தீவிரவாதிகள் முகாம்கள் மீதான இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் விவரம் வெளியீடு..!! appeared first on Dinakaran.