தீபாவளியை முன்னிட்டு வடபழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

2 months ago 14

சென்னை,

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் புத்தாடைகளை அணிந்து, தங்கள் குடும்பத்தினருடன் பட்டாசுகளை வெடித்தும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையில், சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யவில்லை. இதனையடுத்து, பொதுமக்கள் தீபாவளியை கொண்டாடும் விதமாக கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை வடபழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே பொதுமக்கள் குடும்பத்தோடு வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து வடபழனி முருகனை தரிசனம் செய்து வழிபட்டனர். மாலை நேரத்தில் வடபழனி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article