தீபாவளியை முன்னிட்டு தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: ஓபிஎஸ்

3 months ago 14

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளிப் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசுப் பேருந்துகளை கூடுதல் எண்ணிக்கையில் இயக்கவும், தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் பேருந்துக் கட்டணத்தினை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று. ஆனால், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.

Read Entire Article