தீபாவளியை முன்னிட்டு 50 ஆயிரம் சரவெடி வெடிக்க வீதி உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மன்

2 weeks ago 5

காஞ்சிபுரம்,

இந்தியாவில்) உள்ள ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள், காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது. காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப சொரூபிணியாகத் திகழ்கிறது. கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டு காமாட்சி அம்மனை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் புத்தாடைகளை அணிந்து, தங்கள் குடும்பத்தினருடன் பட்டாசுகளை வெடித்தும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மேலும் தீபாவளியை கொண்டாடும் விதமாக, பொதுமக்கள் குடும்பத்தோடு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையில், தீபாவளியை முன்னிட்டு 50 ஆயிரம் சரவெடி வெடிக்க, சிறப்பு அலங்காரத்துடன், லட்சுமி, சரஸ்வதி தேவிகளோடு காமாட்சி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் அம்மனுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.

Read Entire Article