தீபாவளிக்கு பணம் வாங்க சென்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

2 months ago 14

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 45 வயதான கட்டிட தொழிலாளிக்கு திருமணமாகி 15 வயதில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு மனைவி பிரிந்து சென்று குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை வருவதால் புத்தாடைகள், பட்டாசு மற்றும் பணம் ஆகியவற்றை வாங்குவதற்காக மகள் மற்றும் மகன் ஆகியோர் கட்டிட தொழிலாளியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பெற்ற மகள் என்றுகூட பாராமல் கட்டிட தொழிலாளி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கு இருந்து வெளியேறினார்.

இதையடுத்து தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த சிறுமி தாயாரிடம் கூறினார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் நன்னிலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கட்டிட தொழிலாளி மீது போச்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article