தீபாவளிக்கு இத்தனை நாள் வாயே திறக்காதவர்கள் தற்போது வாழ்த்து சொல்கிறார்கள் - எல்.முருகன்

2 months ago 14

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் உள்ள இல்லத்தில் பட்டாசு வெடித்து மக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி பண்டிகை கொண்டாடினார் மத்திய இணை மந்திரி எல்.முருகன்.

சென்னையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

உலகம் முழுவதும் இருக்கும் தமிழக மக்கள் சகோதர சகோதரிகள் என அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்த தீபாவளி இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்க கூடியது.அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு முதல் தீபாவளியாக இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நல்ல விசயங்களை எடுத்து கொண்டு தீய விசயங்களை ஒழிக்க வேண்டும்.நாட்டின் வளச்சிக்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

திமுக என்ற நரகாசுரனை 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ் மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டு,ஒரு சிறந்த தீபாவளியை நாம் கொண்டாடுவோம். நாம் அனைவரும் தயாராகுவோம். நம்புவர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல உதயநிதி வாய் திறந்து இருக்கிறார். தீபாவளிக்கு இத்தனை நாட்களாக வாய் திறக்காதவர்கள், இன்று வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தவெக தலைவர் விஜய்யும் தீபாவளி வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

நாட்டு மக்களின் முதல்-அமைச்சராக இருக்கிறீர்கள். நாட்டில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம்? வாழ்த்து சொல்வதற்கு உங்களை யார் தடுக்கிறார்கள்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து சொல்வார் என்று நம்புகிறோம். அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article