தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜோ பைடன்.. வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி ஏற்றி கொண்டாட்டம்..!!

2 weeks ago 5

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தியாவைத் தாண்டி சமீப வருடங்களாக உலகம் முழுவதும் தீபாவளி அதிகம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் அமெரிக்காவிலும் குறிப்பாக வெள்ளை மாளிகையிலும் நேற்று தீபாவளி கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் அதிபர் ஜோ பைடன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள தீபாவளி வாழ்த்தில்;

வெறுப்பு மற்றும் பிரிவினையின் இருளில் இருந்து ஞானம், அன்பு மற்றும் ஒற்றுமையின் ஒளியைத் தேடும் தீபாவளியின் செய்தியின் அடையாளமாக ஜில் மற்றும் நானும் இன்று தீபம் ஏற்றினோம். இந்த விடுமுறை மற்றும் நமது தேசத்தின் நீடித்த உணர்வை நாம் தழுவுவோம் – மேலும் நமது பகிரப்பட்ட ஒளியின் வலிமையைப் பிரதிபலிக்கவும். மேலும், வெள்ளை மாளிகை பெருமையுடன் தீபாவளியைக் கொண்டாடியது குறித்து குறிப்பிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜோ பைடன்.. வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி ஏற்றி கொண்டாட்டம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article