ஈரோடு, அக். 19: தீபாவளியை முன்னிட்டு ஈரோடு பூம்புகாரில் ஐம்பொன் நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது. ஈரோடு, அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே,மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐம்பொன்னாலான நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று தொடங்கியது. இதுகுறித்து, பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் கஅருண் கூறியதாவது:தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் தீபாவளிக்காக ஐம்பொன்னாலன நகைகள் கண்காட்சி தீபாவளி பண்டிகை வரை நடைபெற உள்ளது.
இங்கு, ஐம்பொன்னால் ஆன வளையல்கள்,சங்கு வளையல்கள், செயின்கள், நெக்லஸ், கொலுசு, கம்மல்,முத்து மற்றும் பவள பாசிகள்,இயற்கை கற்களாலான நகைகள், ராசிக்கல் மோதிரம், பஞ்சலோக மற்றும் நவரத்தின மோதிர வகைகள், ருத்ராட்சம், துளசி, ஸ்படிகம்,கருங்காலி மாலைகள், பிரேஸ்லெட்கள், டாலர்கள் உள்பட பல்வேறு வகை நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஐம்பொன் நகைகள், நவரத்தின மாலைகளுக்கு, 10 முதல் 40 சதவீதம் தள்ளுபடி உண்டு. ரூ. 50 முதல் ரூ.25,000 மதிப்பிலான நகைகள் விற்பனைக்கு உள்ளன. இவை, நேபாளம், குஜராத் மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படும் நகைகளாகும். இவ்வாறு அவர் கூறினார்.
The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூம்புகாரில் ஐம்பொன் நகைகள் கண்காட்சி appeared first on Dinakaran.