தீபாவளி பண்டிகை: விமான கட்டணம் பன் மடங்கு உயர்வு

2 months ago 16

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி வருகின்றனர். ரெயில்கள், அரசு, ஆம்னி பஸ்கள், விமானங்கள், மூலம் மக்கள் சொந்த ஊர் செல்கின்றனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை தொடர்ந்து, விமான கட்டணங்கள் பன் மடங்கு உயர்ந்துள்ளன. தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருவனந்தபுரம், கொச்சி, ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா விமானங்கள் கட்டணகள் அதிரடியாக உயர்ந்துள்ளன.

அதன்படி, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண கட்டணம் ரூ.4,109, தற்போது, ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண கட்டணம் ரூ.4,300, தற்போது, ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை உயர்ந்துள்ளது. விமான கட்டண உயர்வு பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து செல்லும் விமானங்களின் கட்டண விவரம்:-

* கோவைக்கு ரூ.3,474-ஆக இருந்த கட்டணம் இன்று ரூ.7,872 முதல் ரூ.13,428 வரை உயர்வு.

* சேலத்திற்கு சாதாரண நாட்களில் ரூ.3,300 கட்டணம்; இன்று ரூ.8,353 முதல் ரூ.10,867 வரை உயர்வு.

* மதுரைக்கு ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் உயர்வு.

* திருச்சிக்கு ரூ.2,382-ஆக இருந்த விமான கட்டணம் இன்று ரூ.8,211 முதல் ரூ.10,556 வரை உயர்வு.

* கொச்சிக்கு சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.2,592; இன்று ரூ.4625 முதல் ரூ.6510 வரை விமான கட்டணம் உயர்வு.

* டெல்லிக்கு சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.5,475; இன்று ரூ.5,802 முதல் ரூ.6,877 வரை கட்டணம் வசூல்

* கொல்கத்தாவிற்கு சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.4,599-ஆக இருந்த நிலையில் இன்று ரூ.11,296 முதல் ரூ.13,150 வரை உயர்வு.

* ஐதராபாத்திற்கு சாதாரண நாட்களில் ரூ.2,813 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் இன்று ரூ.3,535 முதல் ரூ.7,974 வரை உயர்ந்துள்ளது.

* அந்தமானுக்கு ரூ.5,479-ஆக இருந்த விமான கட்டணம் இன்று ரூ.9,897 முதல் ரூ.10,753 வரை உயர்ந்துள்ளது.

* திருவனந்தபுரத்திற்கு ரூ.3,477-ஆக இருந்த விமான கட்டணம் இன்று ரூ.6,185 முதல் ரூ.18,501 வரை உயர்வு.

Read Entire Article