தீபாவளி பண்டிகை வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்த வேண்டும்

4 weeks ago 5

 

புதுக்கோட்டை, அக்.19: புதுக்கோட்டை மாநாகராட்சி பகுதிகளில் வரும் தீபாவளி பண்டிகை வரை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை நிறுத்தி வைக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு சிறு, குறு வியாபாரிகளும், தரைக்கடை வியாபாரிகளும் தங்களுடைய பொருட்களை விற்பனைக்காக வைத்துள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் இருபுறங்கிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரைக்கடை வியாபாரிகள் விற்பனை செய்வார்கள். சாலை விரிவாக்கப் பணிகளால் தீபாவளிப் பண்டிகைக்காக பொருட்களை வைத்து விற்பனை செய்ய இடம் கிடைக்காமல் சிரமப்படும் சூழல் எற்படும்.

இதனால், பல்வேறு சிறு, குறு, தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே. வருகின்ற தீபாவளிப் பண்டிக்கை வரை மேற்படி ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், வழக்கம் போல தரைக்கடை வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய உரிய இடத்தினை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கித்தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகை வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article