தீபாவளி பண்டிகை: பெங்களூரு- சென்னை இடையே சிறப்பு ரெயில்

3 months ago 15

சென்னை,

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கி இருந்து பணிபுரிந்துவரும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். பண்டிகை காலங்களில் நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது.

அதன்படி, கே.எஸ்.ஆர். பெங்களூரு - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பெங்களூரில் இருந்து அக். 30 மற்றும் நவ. 3 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு சிறப்பு ரெயில் சென்னைக்கு இயக்கப்படும் என்றும், மறுவழித்தடத்தில் சென்னை எழும்பூரில் இருந்து அக். 30, நவ. 3 ஆகிய தேதிகளில் மதியம் 3.55 மணிக்கு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 



 


Read Entire Article