தீபாவளி பட்டாசு கடை வைக்க விரும்புவோர் ஆன்லைனில் அக்.19-க்குள் விண்ணப்பிக்க அரசு அழைப்பு

2 hours ago 2

சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் பட்டாசு கடைகளை வைக்க விரும்புவோர், ஆன்லைன் வாயிலாக வரும் அக்.19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழகத்தில் வரும் அக்.30-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், நிபந்தனைகளின்படி ஆன்லைன் வாயிலாக https://www.tnesevai.tn.gov.in என்ற இணைய தளத்தில் அக்.19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். தற்காலிக பட்டாசு உரிமம் பெற பிற மாவட்டங்களில் உள்ளது போல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறை சென்னை காவல் துறையின் மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு, ஆவடி மற்றும் தாம்பரம் மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Read Entire Article