தீபாவளி கொண்டாட சொந்தஊருக்கு சென்றபோது விபரீதம்: கார் விபத்தில் 9 மாத குழந்தை பலியான சோகம்

2 months ago 12

வாழப்பாடி,

நாடு முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழலில் தீபாவளி கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து ஒரு குடும்பம், சொந்தஊரான சேலத்திற்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தரைப்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் கார் பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் சிக்கி அதில் பயணம் செய்த 9 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அந்த குழந்தையின் பெற்றோரான தீபக் அழகப்பன் - தெய்வானை ஆகிய இருவரும் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாழப்பாடி போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read Entire Article