இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: தோல்விக்கான காரணம் இதுதான் - இங்கிலாந்து கேப்டன் விளக்கம்

4 hours ago 2

கொல்கத்தா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 68 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப்சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் 133 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 79 ரன்கள் அடித்தார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில், "இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே மைதானம் பந்து வீச்சிற்கு உதவியது. இந்த மைதானம் பேட்டிங் செய்ய சாதகமான ஒரு மைதானம்தான் ஆனாலும் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. இது போன்ற ஒரு ரன் குவிக்க வேண்டிய மைதானத்தில் தொட க்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் நாங்கள் போட்டியின் ஆரம்பத்திலேயே பின்னுக்கு தள்ளப்பட்டோம். அதேபோன்று இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதனாலே அவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது. இந்த போட்டியில் இருந்து கற்றுக் கொண்ட தவறுகளை வைத்து அடுத்த போட்டியில் வலுவாக திரும்புவோம்" என்று கூறினார்.

Read Entire Article