தீக்கிரையாகிய ஏடிஎம் மையத்தின் மிஷினில் வைத்திருந்த ₹19 லட்சம் தப்பியது: மும்பை பொறியாளர்கள் தகவல்

1 month ago 4

திருத்தணி, நவ. 21: கனகம்மாசத்திரத்தில், தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏடிஎம் மிஷின் முற்றிலும் எரிந்து நாசமான நிலையில், பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ₹18.96 லட்சம் எவ்வித சேதமுமின்றி தப்பியது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, கடந்த 3 நாட்களுக்கு முன்பு கனகம்மாசத்திரம் பஜாரில் எச்.டி.எப்.சி வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. இதில், ஏடிஎம் மிஷின் வெளிப்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. மிஷினில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் பணம் கதி என்ன ஆனது என்பது பெரும் குழப்பமாக இருந்து வந்தது. இச்சம்பவம் வங்கி அதிகாரிகள், போலீசார் மற்றும் வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. வங்கி அதிகாரிகள் தகவலின் பேரில் மும்பையிலிருந்து ஏடிஎம் மிஷின் தயாரிப்பு நிறுவன பொறியாளர்கள் நேற்று கனகம்மாசத்திரம் வந்து எரிந்து போன ஏடிஎம் மிஷினின் பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து பார்த்த போது, பணம் முழுவதும் பாதுகாப்பாக இருந்தது. அதில் இருந்த ₹18.96 லட்சத்தை தனியார் வங்கி அதிகாரிகள் மீட்டு பாதுகாப்பாக அரக்கோணத்தில் உள்ள எச்டிஎப்சி வங்கிக்கு எடுத்துச்சென்றனர்.

The post தீக்கிரையாகிய ஏடிஎம் மையத்தின் மிஷினில் வைத்திருந்த ₹19 லட்சம் தப்பியது: மும்பை பொறியாளர்கள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article