சென்னை: பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படாமல் மாவட்ட சுகாதார அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளது. குறிப்பாக மருத்துவ உபகரணங்களில் அதிக உயர் மின் அழுத்தம், ஐசியூ-வில் அதிக ஆக்சிஜன் அளவை சரியாக வைக்காமல் இருப்பது உள்ளிட்ட காரணத்தினால் தீ விபத்து ஏற்படும்.
எனவே பொது சுகாதாரத்துறை பேரிடர் மேலாண்மை துறையுடன் இணைந்து மருத்துவமனைகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சில வழிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மருத்துவமனைகளில் இருக்கும் தீ பாதுகாப்பு கருவி (fire alaram) முறையாக செயல்படுகிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும். மின்சாரம் தொடர்பான கணக்கீடு எடுக்க வேண்டும்.
மருத்துவமனை அமைந்து இருக்கும் பகுதியில் உள்ள தீயணைப்பு துறையிடம் மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளது என என்ஓசி (NOC) பெற வேண்டும். மருத்துவமனையில் ஆக்சிஜன் இருக்கக்கூடிய இடத்தில் முறையாக பாதுகாக்க வேண்டும். அவசர காலத்தில் மருத்துவ பணியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளித்திருக்க வேண்டும். தீ ஏற்படும்போது நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் எவ்வாறு வெளியேற்றுவது குறித்து திட்ட வரைபடம் (plan) பதாகை மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே வைக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
The post தீ விபத்து ஏற்படாமல் இருக்க மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பொது சுகாதாரத்துறை வலியுறுத்தல் appeared first on Dinakaran.