தீ விபத்தில் வீட்டை இழந்த தம்பதிக்கு நிவாரணம்

2 months ago 14

நிலக்கோட்டை, டிச. 19: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து (68). இவரது மனைவி பாப்பாத்தி (61). இருவரும் ஆஸ்பெட்டாஸ் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தம்பதி வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்த போது திடீரென வீடு தீப்பிடித்து எரிந்தது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் உடனே வீட்டை விட்டு வெளியேறி தப்பித்தனர். எனினும் இந்த தீ விபத்தில் அவர்களது உடைமைகள், பாத்திரங்கள், பீரோ, சைக்கிள், ரொக்க பணம் ரூ.50 ஆயிரம், 4 பவுன் நகை எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் வட்டாட்சியர் முத்துமுருகன், அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சக்திவேல் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அத்தம்பதிக்கு இலவச வேஷ்டி- சேலை, அரிசி பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். மேலும் தீ விபத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தீ விபத்தில் வீட்டை இழந்த தம்பதிக்கு நிவாரணம் appeared first on Dinakaran.

Read Entire Article