திரையரங்கில் வெளியாகும் 'பேபி ஜான்' பட டீசர் - படக்குழு அறிவிப்பு

2 months ago 14

சென்னை,

கடந்த 2016-ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தெறி'. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் இந்தியில் தற்போது உருவாகி வருகிறது.

அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்து வருகின்றனர். மைக்கேல் படத்தின் ஒளிப்பதிவாளர் கிரண் கவுஷிக் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

அட்லி மற்றும் அவரது மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. "பேபி ஜான்" என தலைப்பிடப்பட்ட இந்த படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 25 -ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு டீசர் குறித்த அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி, நாளை இப்படத்தின் டீசர் திரையரங்கில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

Read Entire Article