திரைத்துறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து அறிக்கை

4 hours ago 2

சென்னை,

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அஜய் ஞானமுத்து. இவர் ஆரம்பத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இவர் அருள்நிதி நடிப்பில் வெளியான ஹாரர் திரில்லர் படமான 'டிமான்ட்டி காலனி' படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். முதல் படத்திலேயே பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுக்களை பெற்றார் அஜய் ஞானமுத்து. அதன் பின்னர் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா ஆகியோரின் நடிப்பில் இமைக்கா நொடிகள் எனும் திரைப்படத்தை இயக்கி மீண்டும் வெற்றி கண்டார்.

அதன் பின்னர் இவர் நடிகர் விக்ரமை வைத்து கோப்ரா திரைப்படத்தை இயக்க இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து இவர், 'டிமான்ட்டி காலனி 2' திரைப்படத்தை இயக்கி கம்பேக் கொடுத்தார்.

தற்போது 'டிமான்டி காலனி' வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அஜய் ஞானமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "அன்பு நண்பர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும், மகிழ்ச்சியைக் கொண்டாடவும் நன்றி தெரிவிக்கவும் சரியான நேரம் இது.

பத்து வருடங்களுக்கு முன்னாள் தமிழ்த்திரையுலகில் பல இளம் தொழில்நுட்ப கலைஞர்களுடன் எனது இயக்குநர் பயணத்தை ஆரம்பித்தேன் இப்போது எனது முதல் படம் 'டிமாண்டி காலனி' பத்து வருடங்கள் நிறைவு செய்திருப்பது உணர்வுப்பூர்வமான தருணமாக உள்ளது நாம் விரும்பியதை செய்யும் போது அதற்கான ஆதரவும் அன்பும் தொடர்ந்து கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

என்னுடைய முதல் படமான டிமான்டி காலனி நான் இயக்குநராகப் பணிபுரிவதற்கு முந்தையகால கட்டத்தின் பிரதிபலிப்பாகும் ஏனெனில் ஹாரர் படங்கள் திரையரங்குகளில் ஒரு பார்வையாளராக எனக்கு அதிக உற்சாகத்தைக் கொடுத்தது. தி எக்ஸார்சிஸ்ட் தி ஓமன் மற்றும் நி கன்ஜுரிங் போன்ற கிளாசிக் ஹாரர் படங்கள் எல்லா சினிமா ரசிகர்களுக்கும் என்றென்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இதுபோன்ற படங்களின் தாக்கமே தடைகளைக் கடந்து புதிய உலகத்தை உருவாக்க என்னைத் தூண்டியது. அதில்தான் டிமாண் காலனி என்ற எனது ஹாரர் ஜானர் படத்தை உருவாக்கினேன்

மோகா மூவிஸ் எம்கே தமிழாசு சார். அருள்நிதி சார் மற்றும் ஸ்ரீ தேணண்டாள் பிலிம் முரளி ராமசாமி சார் ஆகியோரின் ஆதரவு இல்லையென்றால், டிமான்டி காலனி' திரைப்படம் உருவாகி இருக்காது. அவர்கள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன் டிமாண்டி காலளி திரைப்படம் ஒரு நினைவாக இல்லாமல் ஒரு புதிய உலகமாக மாறி நிற்பதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.

அருள்நிதி சார் டிமான்டி காலனி உலகத்திற்கு தனது ஆதரவை தொடர்ந்து கொடுத்து வருகிறார் கிறார் என்பது எனக்கு மிகுந்த உறுதுணையாக உள்ளது மேலும் தொழில்துறை நண்பர்கள். பத்திரிகை ஊடக நண்பர்கள் ள் மற்றும் மற்றும் சினிமா சினிமா ரசிகர்கள் எனக்குக் கொடுத்து வரும் அன்பு ஒவ்வொரு கட்டத்திலும் தரமான படைப்பை வழங்குவதற்கான பொறுப்பை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் இரண்டு படங்களுக்கும் கிடைத்த மகத்தான வரவேற்பை அடுத்து இதன் மூன்றாவது பாகத்தை எனது குழுவுடன் இணைந்து அனைத்து வகையிலும் தரமாகவும் சிறப்பாகவும் எடுத்து வருகிறோம் இது நிச்சயமாக சினிமா ரசிகர்களுக்கு புதுவகையான சில்விடும் ஹாரர் அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் அடுத்தகட்ட தகவலுடன் மீண்டும் சந்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் அஜய் ஞானமுத்து

Read Entire Article