திருவொற்றியூர் ரயில்வே மேம்பாலம் அருகே சீரமைக்கப்படாத சாலை பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்

1 month ago 5

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் இருந்து மாட்டு மந்தை ரயில்வே மேம்பாலத்தை கடந்து பேசின் சாலை வழியாக மணலி, மீஞ்சூர், மாதவரம் மற்றும் ஐ.ஓ.சி போன்ற பகுதிகளுக்கு தினமும் பேருந்து, லாரி, கார், பைக் போன்ற ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த மாட்டு மந்தை ரயில்வே மேம்பாலம் இறங்கும் இடத்தில் சாலையோரம் மழைநீர் வெளியேறும் வகையில், தொட்டி அமைக்க தெற்கு ரயில்வே துறையினர் பள்ளம் தோண்டினர்.  அங்கு, தொட்டி வைத்த பிறகு, பள்ளத்தை மூடாததால், பாலத்தில் இருந்து கீழே இறங்குபவர்கள் இந்த பள்ளத்தில் நிலை தடுமாறி விழும் அபாயம் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் இந்த இடத்தில் பள்ளம் இருப்பது தெரியாமலேயே பலமுறை வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி உள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த வழியாக கால்நடைகள் நடந்து செல்லும் போது இந்தப் பள்ளத்தில் தவறி விழுந்துள்ளது. எனவே, இந்த பள்ளத்தை மூடி, அந்த இடத்தில் சாலை அமைக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு வாகன ஓட்டிகள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், பணியையும் முடிக்காமல், பள்ளத்தையும் மூடாமல் கிடப்பில் வைத்திருப்பதால் எந்த நேரத்திலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ரயில்வே துறை அதிகாரிகள் மழைக்காலத்திற்கு முன், இந்த பள்ளத்தை மூடி அங்கு சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவொற்றியூர் ரயில்வே மேம்பாலம் அருகே சீரமைக்கப்படாத சாலை பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article