திருவையாறு, மே 5: வைத்தியன்கோட்டை அருகே பனையூரில் 35லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உலர்களம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டை பனையூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25 கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தரம் பிரிப்பு கூடத்துடன் கூடிய பல்நோக்கு உலர்களம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. தஞ்சாவூர் எம்பி முரசொலி, எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை துவக்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிவசங்கரன், நகர செயலாளர் நாகராஜன், முன்னாள் ஒன்றிய தலைவர் அரசாபகரன், வேளாண்மை துணை இயக்குனர் சுதா மற்றும் வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், வேளாண் வணிக அலுவலர்கள் கொண்டனர்.
The post திருவையாறு பனையூரில் பல்நோக்கு உலர்களம் கட்ட அடிக்கல் appeared first on Dinakaran.