திருவையாறு காவிரி கரையில் தியாகராஜர் ஆராதனை - கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்பு

8 hours ago 2

தஞ்சாவூர்,

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீ தியாகராஜர், திருவாரூரில் பிறந்து, திருவையாற்றில் வாழ்ந்து, திருவையாறு காவிரிக்கரையில் 1847-ம் ஆண்டு முக்தி அடைந்தார். இவர் இயற்றிய கீர்த்தனைகள், கர்நாடக இசை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.

தியாகராஜரை நினைவு கூறும் வகையில் திருவையாற்றில் ஸ்ரீ தியாக பிரம்ம சபா சார்பில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், தியாகராஜரின் 178-வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்ச ரத்தின கீர்த்தனை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் இன்று நடைபெற்றது.

இதில் தியாகராஜரின் முத்தான 5 பஞ்ச ரத்தின கீர்த்தனைகளை நூற்றுக்கணக்கான கர்நாடக இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் பாடி இசை அஞ்சலி செலுத்தினர். இதில் பிரபல பாடகர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஜனனி, ஓ.எஸ்.அருண் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Read Entire Article