விதர்பா,
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடகா - விதர்பா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது. விதர்பா அணி தரப்பில் அதிகபட்சமாக சமரன் ரவிச்சந்திரன் 101 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய விதர்பா அணி 48.2 ஓவர்கள் முடிவில் 312 ரன்களுக்கு ஆல் ஆனது. இதன்மூலம் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகா அணி விஜய் ஹசாரே கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம் விஜய் ஹசாரே கோப்பை தொடரின் அதிக முறை சாம்பியன் பட்டம் (5) வென்ற தமிழ்நாடு அணியின் சாதனையை கர்நாடகா அணி சமன் செய்துள்ளது.
இப்போட்டியில் சதமடித்து அசத்திய கர்நாடக வீரர் சமரன் ரவிச்சந்திரன் ஆட்டநாயகன் விருதை வென்றார். விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 779 ரன்கள் குவித்த கருண் நாயர் தொடர் நாயகன் விருதை வென்றார்.