திருவேற்காடு எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் 6 நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

3 weeks ago 5

திருவள்ளூர்: திருவேற்காடு எஸ்ஏ பொறியியல் கல்லூரி மற்றும் ஐஇஇஇ இணைந்து “வணிகத்தில் நிலையான வளர்ச்சி இலக்குகளை ஒருங்கிணைத்தல் மற்றும் உலகளாவிய தாக்கத்திற்கான தொழில்முறை தொடர்புகளை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடர்ந்து 6 நாட்கள் நடத்தியது. தொடக்க விழாவிற்கு கல்லூரி தாளாளரும், பொருளாளருமான அமர்நாத் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன், துறை தலைவர்கள் அந்தோணி தாஸ், ரோகினி, கோட்டீஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் நளினி முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்க நாளில் ஐஇஇஇ பிசிஎஸ் சென்னை பகுதி தலைவர் எச்.ஆர்.மோகன், ஆவடி வேல்டெக் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மைக்ரோசாப்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் ஆனந்தகுமார் நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் வணிகத்தில் அதன் தொடர்பு பற்றி புரிந்துகொள்வது எவ்வாறு என்பது பற்றியும், பெங்களூரு, ஐஐஐடி எம்பிரிட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீநாத் ஸ்ரீனிவாசா நிலையான வளர்ச்சிக்கான தலையீட்டு அறிவியலை நோக்கி என்ற தலைப்பிலும் பேசினர்.

மேலும் சென்னை எல்என்டி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் பொன்மணிவண்ணன் செயற்கை நுண்ணறிவு மற்றும் நிலைத்தன்மையில் வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் நிலையான சந்தைப்படுத்துதலுக்கான சாலை வரைபடத்தை உருவாக்குதல் பற்றியும், சென்னை நாட்வெஸ்ட் குரூப் நிறுவனத்தின் துணைத் தலைவர் துர்கா பாலசுப்பிரமணியம் நிலையான வளர்ச்சி இலக்குகளின் ஒருங்கிணைப்பு வெற்றியை அளவிடுவதற்கான தரவு பகுப்பாய்வு பற்றியும், சென்னை ஐஐடி மெட்ராஸ் ஸ்கூல் நிறுவனத் தலைவர் ரஜ்நிஷ் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிப்பதில் பொருட்களின் பங்கு பற்றியும் விளக்கினர். நிறைவு நாளில் சென்னை, ஐஇஇஇ சிஎஎஸ்எஸ் சென்னை பகுதி தலைவர் பி.சக்திவேல் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.

The post திருவேற்காடு எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் 6 நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article