திருவாடானை, பிப். 8: திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை சேகரித்து அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல் மிக நாத சுவாமி கோயில் உள்ளது இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளியூர் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து இரவு தங்கி இந்த குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு பெய்த கன மழையால் கோயில் குளம் நிரம்பியுள்ளது. வெயில் காரணமாக குளத்தில் உள்ள மீன்கள் அனைத்தும் தினமும் செத்து மிதக்கின்றன. இந்நிலையில் பக்தர்களின் நலன்கருதி கோயில் நிர்வாகம் ஒருவரை நியமித்து செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணியை செய்து வருகின்றனர்.
The post திருவெற்றியூர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.