திருவெறும்பூர் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 2 வாலிபர் கைது

4 hours ago 2

திருவெறும்பூர், பிப்.12: திருவெறும்பூர் அருகே அரசு மதுபான பாட்டில்களை கள்ள சந்தையில் விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் இதனை பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்தனர். இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி செங்குளம் கரை பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பதாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது, அரியமங்கலம் ஆயில் மில் செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்த தர் (48) என்பவரை கையும் காளவுமாக கைது செய்தனர். ஏற்கனவே திருவெறும்பூர் காவல் நிலையத்தில் 6வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் திருவெறும்பூர் அடுத்த தொண்டமான்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே, திருவெறும்பூர் போலீசார் நடத்திய சோதனையில் துவாக்குடி வடக்குமலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராமர் மகன் பிரபு (31) என்பவன் கள்ளச்சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தப்பொழுது கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவனிடமிருந்து 116 அரசு மதுபான பாட்டில்களையும், மதுபான விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

The post திருவெறும்பூர் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 2 வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article