தமிழகத்தில் ரூ.7,375 கோடிக்கான புதிய தொழில் முதலீடுகள்: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

3 hours ago 2

தமிழகத்தில், 19 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.7,375 கோடிக்கான புதிய முதலீடுகளுக்கு பிப்.10-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், பட்ஜெட் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், பல்வேறு புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கவும் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த பிப்.10-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின், செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழகத்தில் ஆட்சேபகரமற்ற நிலங்களில் ஆக்கிரமி்ப்பு செய்து வாழ்ந்து வரும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Read Entire Article