திருவெறும்பூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது

1 day ago 5

 

திருவெறும்பூர், பிப்.19: திருவெறும்பூர் அருகே சிறுமியை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.துவாக்குடி வடக்குமலையை சேர்ந்த 17 வயது பெண் கடந்த 3ம்தேதி மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை கடந்த 6ம் தேதி துவாக்குடி போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ நாகராஜன் வழக்குபதிந்து தேடி வந்தார்.இந்நிலையில் துவாக்குடி வடக்கு மலை மாசிலாமணி மகன் விஜய் (19) என்பவர் ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணை திருவாரூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஜயை கைது செய்ததோடு, இளம்பெண்ணையும் மீட்டு திருவெறும்பூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் விஜய் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிறுமியை தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

The post திருவெறும்பூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article