காரியாபட்டி, பிப்.21: காரியாபட்டி அருகே விளை நிலங்களில் மின்கம்பம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் அருகே ரூ.20 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மின் நிலையத்திற்கு மின்சாரம் கொண்டு வருவதற்காக உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இந்த உயிர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு முன் விவசாயிகளிடம் எந்தவித முன் அறிவிப்பும் தெரிவிக்காமல் விவசாய நிலங்களில் குழிகள் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த விவசாயிகள் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் விவசாயம் செய்வதற்கு நெல் நாற்றுக்குள் கான்கிரீட் அமைக்க முயற்சித்தபோது விவசாயிகள் தடுத்தனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகளிடம் ஆலோசனை செய்த பிறகு வேலைகள் துவங்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post காரியாபட்டி அருகே வயல்களில் மின்கம்பம் அமைப்பதற்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.