*ரூ.75 ஆயிரத்திற்கு கிடாய் விற்பனை
கே.வி.குப்பம் : கே.வி.குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்நிலையில் திங்கட்கிழமையான நேற்று காலை சந்தை வழக்கம்போல் கூடியது. இதில் ஏராளமான வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ஆடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தனர்.
வெள்ளாடுகள், முத்து கிடாய் ரகங்கள் என பல்வேறு ரகங்கள் கொண்ட ஆடுகள் அதிகம் கொண்டு வரப்பட்டிருந்தது. மொத்தமாக 3000 ஆடுகள் வரையும், தலா ஒரு ஆடு ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிராமங்களில் அம்மன் திருவிழாக்கள் தற்போது தொடங்கி உள்ளதால், நேர்த்தி கடனுக்காக ஆடுகள் வெட்டுபவர்கள் அதிகளவில் ஆடுகளை வாங்குவதால், ஆடுகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
வருகிற வாரங்களில் கூடுதலாக வியாபாரம் களை கட்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதில் ஆந்திராவை சேர்ந்த ஒருவர் தனது நாட்டு கிடாய் ஆட்டை 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்றார். இதுகாண்போரை அதிர்ச்சியடை செய்தது.
The post திருவிழா சீசன் தொடங்கியுள்ள நிலையில் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விலை கிடு கிடு உயர்வு appeared first on Dinakaran.