திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் மகளிர் காவல் நிலையம் கட்டிடம்

3 days ago 3

திருவாரூர், மார்ச் 30: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ரூ 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசன் கட்டிடத்தினை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்துவைத்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ரூ.80 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய புதிய கட்டடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்துவைத்தார். இதனையடுத்து இந்த கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சியானது கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமையிலும், எஸ்.பி கருண்கரட் முன்னிலையிலும் நடைபெற்றது.

பின்னர் கலெக்டர் மோகனசந்திரன் கூறியதாவது, அனைத்து மகளிர் காவல் நிலையம் ரூ.80 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 629 சதுரஅடிபரப்பளவில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் அமையப்பெற்றுள்ளது. ஆயிரத்து 298 சதுரஅடி பரப்பு கொண்ட தரைதளத்தில் தலைவாயில், ஆய்வாளர் அறை, எழுத்தர் அறை, நிலைய காவலாளி அறை மற்றும் ஆயுத வைப்பு அறை, ஆண்களுக்கான கைதி அறை, பெண்கள் கைதி அறை மற்றும் குழந்தைகள் பேணும் அறையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆயிரத்து 201 சதுர அடி பரப்பு கொண்ட முதல் தளத்தில் கணினிஅறை, உதவிஆய்வாளர் அறை, ஆலோசனை அறை மற்றும் ஓய்வு அறையுடன் அமையப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் மற்றும் கழிப்பறைவசதிகள் அமையப்பட்டுள்ளது. நல்ல தரமான நிலத்தடிநீர் ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்குமாறும், மற்றும் மழைநீர் சேகரிப்புகள் கட்டமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திகொள்ளுமாறு காவலர்களை கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஒ சௌம்யா, துணைகாவல் கண்காணிப்பாளர் தமிழ்மாறன், நன்னிலம் தாசில்தார் ரஷியாபேகம், பேரூராட்சி மன்ற தலைவர் ராஜசேகரன், காவல் ஆய்வாளர் சங்கீதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் மகளிர் காவல் நிலையம் கட்டிடம் appeared first on Dinakaran.

Read Entire Article