திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகள்

3 weeks ago 6

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணிகள், ஆசிரியரல்லாத பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Professor/Assistant Professor/Associate Professor.
மொத்த இடங்கள்: 23 ( Professor-8, Associate Professor-9, Assistant Professor-6).

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள்: Applied Psychology/Economics/Education/Geography/Geology/History/Horticulture/Law/ Maths/Material Science/Music/Social Work/Statistics and Applied Mathematics/Tourism & Hospitality Management/Physical Education & Sports.

தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.எச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழக விதிமுறைப்படி பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.500/-. பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.750/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. www.cutnrec.samarth.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2024.

b. ஆசிரியரல்லாத பணிகள் (Non-Teaching Staff)

i) Information Scientist: 1 இடம் (பொது). வயது: 40க்குள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்சில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ii) Assistant Librarian: 1 இடம் (பொது). வயது: 40க்குள். தகுதி: Library Science/Information Science/Documentation Science பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) Lower Division Clerk: 4 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-1). வயது: 32க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் ஆபரேஷனில் நல்ல திறமையும், நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள் அல்லது இந்தி 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
iv) Multi Tasking Staff: 3 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1, மாற்றுத்திறனாளி-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
v) Library Attendant: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). வயது: 32க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நூலக அறிவியலில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
vi) Laboratory Attendant: 1 இடம் (எஸ்டி). வயது: 32க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் லேபரட்டரி டெக்னாலஜியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
vii) Hostel Attendant: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 32க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Hostel/Canteen/Hotel/Guest Houseல் 2 வருட பணி அனுபவம்.
viii) Internal Audit Officer/Consultant Internal Audit: 1 இடம்.
வயது: 65க்குள். தகுதி: வணிகவியலில் முதுகலைப் பட்டம் அல்லது நிதி/சிஏ/ஐசிடபிள்யூஏ வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஏழாவது ஊதியக் குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கட்டணம்: ரூ.750/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. www.cutnnt.samarth.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர் படிவத்தை பிரின்ட்அவுட் எடுத்து அதை தேவையான சான்றிதழ்களில் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டிய முகவரி:

The Joint Registrar,
Recruitment Cell, Central University of Tamilnadu,Neelakudi,Thiruvarur- 610 005,Tamilnadu.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2024.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 10.11.2024.

The post திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article