திருவாரூர் நீடாமங்கலம் அருகே பேருந்தில் இருந்து மாணவி கீழே விழுந்த விவகாரம்: நடத்துநர் பணியிடை நீக்கம்

18 hours ago 2

திருவாரூர்: திருவாரூர் நீடாமங்கலம் அருகே பேருந்தில் இருந்து மாணவி கீழே விழுந்த விவாகரத்தில் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தி. இவர் அருகில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்த பின்பு மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் சென்ற அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது கிருஷ்ணாபுரம் வரும் போது எழுந்து நின்று படிக்கட்டின் அருகே நின்றுள்ளார். அப்போது பேருந்து அதிவேகமாக சென்ற நிலையில் மாணவி கீழே தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த மாணவியை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக தற்போது தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவி விழுந்த சிசிடிவி காட்சி வெளியான நிலையில், விபத்துக்கு காரணமான அரசு பேருந்து நடத்துனர் சுரேஷ் குமார் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி அரசு பேருந்துகளின் போக்குவரத்து கழக பொது மேலாளர் அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து மாணவ, மாணவிகள் அதிகளவில் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பேருந்துகள் பொறுமையாக செல்ல வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் தெரிவித்தனர்.

The post திருவாரூர் நீடாமங்கலம் அருகே பேருந்தில் இருந்து மாணவி கீழே விழுந்த விவகாரம்: நடத்துநர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article