
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கஞ்சிரம்குளம் பகுதியை சேர்ந்த 7 பேர் காரில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
திருவாளூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கருவேப்பஞ்சேரி பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வந்த அரசு பஸ் மீது கார் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த ராஜேஷ், சஜித், ராகுல், ரஜினத் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சிய 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.