திருவாரூர், அக். 21: திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா பெரும்பண்ணையூர் கிராமம் கோவில்பத்து பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன் மனைவி செலஸ்டினா(33). இவர், கூத்தூர் அஞ்சலகத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், 2 வதாக செலஸ்டினா கர்ப்பமான முதல் அதே பகுதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 5ந் தேதி அதே மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அதில் செலஸ்டினாவிற்கு உதிரப்போக்கு அதிகமானதால் 7ந்தேதி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அங்கு அனுமதித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கு சிகிச்சையில் இருந்து வந்த செலஸ்டினாவிற்கு இடைப்பட்ட காலத்தில் சிறுநீரகம் செயலிழந்ததாக கூறி டயாலிசிஸ் சிகிச்சையும் அளித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்து வந்தவர் நேற்று காலை 10 மணி அளவில் திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து செலஸ்டினாவின உயிர் இழப்பிற்கு காரணம் தனியார் மருத்துவமனை தான் என்றும் தங்களது அனுமதி இல்லாமலேயே அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளதாக செலஸ்டினாவின் கணவர் பாண்டியன், தனியார் மருத்துவமனை மீது திருவாரூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
அரசு, நகர பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை என்ற திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்லும் மகளிர் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றி வரும் பெண்களும் பயனடைகின்றனர்.
The post திருவாரூரில் குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு appeared first on Dinakaran.