
திருவாரூர்,
தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு வருகிற 7-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், திருவாரூர் மாவாட்டத்தில் ஏப்.7 அன்று நடக்கவிருந்த 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
ஆழி தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு வருகிறட் ஏப்.7இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ் பாடத் தேர்வு ஏப்.8இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கம் போல நடைபெறும் எனவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.